இது செயல்படும் அரசா இல்லை, செய்திக்கான அரசா நீங்களே சொல்லுங்கள் முதல்வரே ? முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் காயத்ரி ரகுராம்
தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து முதல்-அமைச்சர் ஸ்டாலினை விமர்சித் துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் அவதியடைந்துள்ளனர்.
தமிழக அரசும் பலவேறு மீட்பு நடவ்படிக்கைகளை எடுத்து வருகிறது, அந்த வகையில் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பதிவில்:
மழை வெள்ள பாதிப்பை முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தபடியே செல்கிறார். அப்போது அங்கிருக்கும் வீடுகளில், மக்கள் வீட்டை விட்டு வெளியே வராதவாறு, கயிறு கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் வீட்டிற்குள்ளிருந்தபடியே அந்தந்த வீட்டினர் முதல்-அமைச்சருக்கு வணக்கம் தெரிவிக்கிறார்கள். முதல்-அமைச்சரும் பதிலுக்கு வணக்கம் சொல்லியபடி மழைநீரில் நடந்து செல்கிறார்.
இந்த போட்டோவை பதிவிட்ட காயத்ரி ரகுராம், இது செயல்படும் அரசா இல்லை செய்திக்கான அரசா நீங்களே சொல்லுங்கள் முதல்வரே என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இது செயல்படும் அரசா இல்லை செய்திக்கான அரசா நீங்களே சொல்லுங்கள் முதல்வரே pic.twitter.com/lk05GMEy2s
— Gayathri Raguramm ??? (@BJP_Gayathri_R) November 9, 2021
அத்துடன் வீட்டின் முன்பு கட்டப்பட்ட அந்த கயிறை சிவப்பு கலரில் குறிப்பிட்டு சுட்டிக்காட்டி உள்ளார்.
காயத்ரி ரகுராம் பதிவிற்கு பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
காயத்ரிக்கு ஆதரவாகவும், அண்ணாமலை படகில் சென்றதை பதிவிட்டு சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் கலவையான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.