காயத்ரி ரகுராமை டுவிட்டரில் block செய்த உதயநிதி!

Udhayanidhi Stalin Dmk Bjp Gayathri Raghuram
By Thahir Jun 23, 2021 08:09 AM GMT
Report

திமுக குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்த பாஜக பிரதிநிதி காயத்ரி ரகுராமின் டுவிட்டர் பக்கத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி, அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் ஆகியோர் block செய்துள்ளனர்.

காயத்ரி ரகுராமை டுவிட்டரில் block செய்த உதயநிதி! | Gayathriraghuram Udhayanidhistalin Dmk Bjp

பாஜக கலை இலக்கிய பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் திமுகவின் விடியல் ஆட்சி குறித்து விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் மின்வெட்டு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிய போது அணிலும் மின்வெட்டுக்கு ஒரு வித காரணம் என கூறினார்.இதனை கிண்டலாக காயத்ரி ரகுராம் விமர்சித்து ட்வீட் செய்திருந்திருந்தார்.

 அதில், திமுக நீங்கள் அந்த அணிலை கண்டுபிடித்தீர்களா, அந்த அணிலை கைது செய்தீர்களா? இந்த அணில் திமுக நிர்வாகத்தை /கட்சி / வம்ச ஆட்சிக்கான உங்களை அவமதிக்கிறது. இது எங்கள் முதல்வர் ஏற்க முடியாது. நான் அதை கண்டிக்கிறேன்.

இது போன்ற கருத்துக்களால் கடுப்பான திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி, நிதியமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் காயத்ரி ரகுராமை டுவிட்டரில் block செய்துள்ளனர்.

அதே தனது டுவிட்டர் பக்கத்தில் எடுத்து போட்டு, மேலும் விளம்பரம் இல்லையா? நான் உங்கள் விளம்பர ஸ்டண்டை மட்டுமே பாராட்டினேன்.

அதற்காக என்னை ஏன் block செய்தீர்கள்? தொட்டா சிணுங்கி போல sensitive அ இருக்கீங்களே என்றும் நான் என் திரைப்பட படப்பிடிப்பு செய்து நீண்ட நாட்களாகிவிட்டன. குறைந்தபட்சம் உதய் படப்பிடிப்பு இடத்திற்கு நான் பார்வையிட செல்லலாம் என்று நினைத்தேன்.

இனிமேல் எனக்கு இடம் தெரியாது. பி.டி.ஆரை திரையில் பார்ப்பது சிறந்தது. அவர் அனைவருக்கும் பிரபலமானவர். மீண்டும் கிண்டலாக விமர்சித்துள்ளார் காயத்ரி ரகுராம்.