பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலிக்கும் காயத்ரி ஷங்கர்? வெளியான தகவல்!
நடிகை காயத்ரி ஷங்கர் காதல் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.
காயத்ரி ஷங்கர்
18 வயசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் காயத்ரி ஷங்கர். அதைத்தொடர்ந்து இவரும் விஜய் சேதுபதியும் இனைந்து நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படம் பெரும் வெற்றி பெற்றது. அதில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் காயத்ரி.
இதுவரை 17க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் விக்ரம் படத்தில் நடித்து ரசிகர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
காதல்
இந்நிலையில் காயத்ரி பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனான அரவிந்த் உடன் காதலில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அரவிந்தின் மேடை நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
ஆனால் இதுகுறித்து இவர்கள் இருவரிடம் இருந்தும் எந்தவிதாமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.