பீரியட்ஸ் நேரத்தில் அத பண்ண மாட்டேன்; என் பிரண்ட்ஸ் மோசமானவங்க - நடிகை ஓபன் டாக்!

Gayathrie Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Apr 20, 2024 03:47 PM GMT
Report

நடிகை காயத்ரி ரெட்டி தனது யூடியூப் சேனல் காயத்ரி ரெட்டி வெளியிட்டுள்ள வீடியோவில் பீரியட்ஸ் குறித்து பேசியுள்ளார்.

காயத்ரி ரெட்டி

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தில் மாரி எனும் கால்பந்து விளையாட்டு வீராங்கனை கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் காயத்ரி ரெட்டி.

பீரியட்ஸ் நேரத்தில் அத பண்ண மாட்டேன்; என் பிரண்ட்ஸ் மோசமானவங்க - நடிகை ஓபன் டாக்! | Gayathri Reddy About Coffee And Her Toxic Friends

இதனையடுத்து கவின் நடிப்பில் வெளியான லிப்ட் படத்தில் பேயாக நடித்திருப்பார். பிளாஷ்பேக் காட்சிகளில் தாரா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பின்னர் தெலுங்கில் வெளியான ஷிக்கரு படத்திலும் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது யூடியூப் சேனல் காயத்ரி ரெட்டி வெளியிட்டுள்ள வீடியோவில் பீரியட்ஸ் குறித்து பேசியுள்ளார்.

மாதவிடாய் காலம் 

அவர் கூறியதாவது "மாதவிடாய் காலத்தில் காபி குடிக்க மாட்டேன். அப்படி குடித்தால் அது எனக்கு மேலும் கஷ்டத்தை கொடுக்கும். அந்த நேரத்தில் எனக்கு ஏற்படும் வலி காரணமாக பிளாக் அவுட் ஆகிவிடும். பீரியட்ஸ் முடிந்து நான்கு நாள் கழித்து தற்போது காபி குடிக்கிறேன்.

பீரியட்ஸ் நேரத்தில் அத பண்ண மாட்டேன்; என் பிரண்ட்ஸ் மோசமானவங்க - நடிகை ஓபன் டாக்! | Gayathri Reddy About Coffee And Her Toxic Friends

அந்த நேரத்தில் ஏதாவது குடிக்க விரும்பினால் லெமன் டீ அல்லது ஜிஞ்சர் டீ மட்டுமே குடிப்பேன். கஃபைன் அதிகம் உள்ளதால் மாதவிடாய் காலத்தில் யாரும் காபி குடிக்க வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னுடைய நண்பர்கள் எல்லாம் ரொம்பவே மோசமானவர்கள் என்றும் வெட்டி பந்தா ஓவர் சீன் போடுவதால் அவர்களை எல்லாம் கட் பண்ணிட்டேன். அவர்கள் இன்னமும் குழந்தைகள் போல நேரத்தை வீணடித்து வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.