தாயையே 30 வினாடிகளில் அவமானப்படுத்திய பிரதமர் மோடி - காயத்ரி ரகுராம் சாடல்

ADMK BJP Narendra Modi Gayathri Raghuram
By Karthick May 22, 2024 08:03 AM GMT
Report

பிரதமர் மோடி பேட்டி ஒன்றில் தான், தான் மனித பிறவி அல்ல தெரிவித்துள்ள கருத்துக்கள் விமர்சனத்தை பெற்று வருகின்றது. 

மோடி பேட்டி

 நடைபெறும் மக்களவை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். தனியார் தொலைக்காட்சிகளுக்கு நேரடியாக பேட்டியளித்து வரும் அவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்துக்கள் விமர்சனத்தை பெற்று வருகின்றது.

PM Modi in ram mandir

அதாவது, நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை என பேசினார்.

வேடத்தைக் கலைத்துவிட்டார் மோடி - நிறுத்திக்கொள்ளுங்கள்!! முக ஸ்டாலின் பதிவு

வேடத்தைக் கலைத்துவிட்டார் மோடி - நிறுத்திக்கொள்ளுங்கள்!! முக ஸ்டாலின் பதிவு

அம்மாவையே....


இது குறித்து பல கருத்துக்கள் வெளிப்பட்டு வரும் நிலையில், பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ள காயத்ரி ரகுராம் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,     

Gayathri raguramm and PM Modi

நான் உயிரியல் ரீதியாக பிறக்கவில்லை, ஆனால் நான் கடவுளால் நேரடியாக அனுப்பப்பட்டேன் என்று நான் நம்புகிறேன்" தன்னை ‘கடவுளின் அவதாரம்’ என்று வெளிப்படையாக சொல்லிக் கொள்கிறார். அவர் தனது தாயை 30 வினாடிகளில் அவமானப்படுத்தினார்.

அனைத்தும் அதிகாரத்திற்காக காசி விஸ்வநாதரை விட பெரிய ஆண்டவனாக நினைக்கும் மோடி, இப்படிப்பட்ட மனப்பான்மையுடன் வாரணாசியில் வெல்லக் கூடாது. மாறாக இமயமலையில் அமர்ந்து தன்னை கற்பனை செய்து கொண்டு தியானம் செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்