திமுகவில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்? அமைச்சர் பொன்முடி தகவலால் பரபரப்பு
காயத்ரி ரகுராமை திமுகவில் இணைப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
காயத்ரி ரகுராம் நீக்கம்
தமிழக பாஜகவிலிருந்து கயத்ரி ரகுராம் நீக்கப்பட்டார், இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம், இனிமேல் பாஜகவில் நான் சேரமாட்டேன்.
எந்தக் கட்சி அழைத்தாலும் இணைந்து மக்கள் பணியாற்றுவேன் என்று அறிவித்தார். தன்னை அழைத்தால் திமுக அல்லது விசிகவில் இணைய தயார் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
திமுகவில் இணைகின்றாரா
அதற்கு பதில் கூறிய அமைச்சர் பெரியார், அண்ணாவின் கொள்கைகளை ஏற்று பின்பற்றி யார் திமுகவிற்கு வந்தாலும் அவர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்ளப் படுவார்கள்.
காயத்ரி ரகுராமுக்கும் அதேதான். எங்கள் கொள்கைகளை பின்பற்றுவோரை திமுக தலைமை ஏற்றுக்கொள்ளும். எங்கள் முதல்வரும் ஏற்றுக்கொள்வார் என்று கூறினார். இதன் மூலம் காயத்ரி ரகுராம் திமுகவில் இணையலாம் என கூறப்படுகின்றது.