திருமாவளவனுடன் நடிகை காயத்ரி ரகுராம் திடீர் சந்திப்பு..!

Thol. Thirumavalavan Tamil nadu BJP Gayathri Raghuram
By Thahir Feb 22, 2023 02:06 AM GMT
Report

சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் இருந்து நீக்கம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இதன் காரணமாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உள்ள பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்ல என்று நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பெண்களுக்கான சக்தி யாத்திரையை மேற்கொள்ளப் போவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்திருந்தார்.

திருமாவளவனுடன் திடீர் சந்திப்பு

இந்த சூழலில் சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு  நடிகை காயத்ரி ரகுராம் நேற்று வந்தார்.

Actress Gayathri Raghuram has a surprise meeting with Thirumavalavan.

அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நூலாடை மற்றும் நூல் வழங்கி வரவேற்றார்.

Actress Gayathri Raghuram has a surprise meeting with Thirumavalavan.

மரியாதை நிமித்தாக நடைபெற்ற சந்திப்பு இது என்று கூறப்பட்டது. ஆனால், அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14-ம் தேதி பெண்களுக்காக தான் நடத்தும் யாத்திரையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடங்கி வைக்க வேண்டும் என நடிகை காயத்ரி ரகுராம் கேட்டுக் கொள்ள இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.