பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு நீக்கம் - அண்ணாமலை அதிரடி

BJP K. Annamalai
By Thahir Nov 22, 2022 07:13 AM GMT
Report

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காயத்ரி ரகுராம் நீக்கம் 

நடிகையும், நடன இயக்நருமான காயத்ரி ரகுராம் பாஜகவில் இணைந்தார். ட்விட்டர் பக்கங்களில் மிக ஆக்டிவாக இருந்து வரும் அவர் பல கருத்துகளை தெரிவித்து வந்தார்.

இவருக்கு பாஜகவில் அண்டை மற்றும் வெளிநாடு வாழ் பிரிவு தலைவராக இருக்க கூடியவர் காயத்ரி ரகுராம். தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு கட்சியின் தலைமை குறித்தும் அண்ணாமலை குறித்தும் அவதுாறாக கருத்து தெரிவித்தாக தெரிவிக்கப்படுகிறது.

Gayathri Raghuram expelled from BJP for 6 months

இந்த நிலையில் கட்சியின் தலைமைக்கு இவர் மீதான புகார்கள் எழுத்து பூர்வமாக வந்துள்ளது. இந்த புகார்களுக்கு அவர் தொடர்ச்சியாக எந்த பதிலும் அளிக்காமல் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதம் நீக்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

6 மாதத்தில் முழுமையான விளக்கங்களை எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் மீதான புகார்களுக்கு அவர் விளக்கம் அளிக்கவில்லை என்றால் கட்சியில் இருந்து முழுமையாக நீக்க நடவடிக்கையை மாநில தலைமை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.