ஊருக்குதான் உபதேசம் போல ஏ. ஆர். ரஹ்மானை விமர்சித்த காயத்ரி, கொந்தளித்த இணையவாசிகள்

Hindi ARRahman GayathriRahuram
By Irumporai Apr 12, 2022 03:18 AM GMT
Report

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து விமர்சனம் செய்த பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராமினை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷா இந்திதான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என கூறியிருந்தார். ஏ.ஆர் ரஹ்மானின் இந்த கருத்து குறித்து பாஜாக நிரவாகியும் நடிகையுமான காயத்ரி ராகுராம் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் :

ஏ.ஆர் ரஹ்மான் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் அதேசமயம் , இனிமேல் இந்திபடங்களில் பாடல் இசையமைக்கும் போது அதை தமிழில்தான் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தி மக்கள் தமிழ் மொழியை அறிந்துகொண்டு கற்றுக்கொள்வார்கள், அதுதான் தொடக்கமாக இருக்கும் என கூறிய காயத்திரி ரகுராம்.

ஜெய் ஹோ என்ற இந்தி பாடலுக்காக அவர் ஆஸ்கார் விருதை வென்றார். அப்போது நான் இந்தப் பாடலை தமிழில் செய்யவில்லை என்பதால் எனக்கு இந்த விருது தேவையில்லை என்று கூறினாரா? .

ஊருக்கு உபதேசம் செய்தால் மட்டும் போதாது அதனை செயல்படுத்தவேண்டும் என கூறினார்.காயத்ரி ரகுராமின் இந்த பேச்சினால் கடுப்பான ரஹ்மான் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை பதிலடியாக கொடுத்துவருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த சில ஆண்டுகளாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தமிழ் மொழியின் புகழைப் பரப்பும் விதமாக பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மூப்பில்லா தமிழ் என்று தமிழின் பெருமை பறைசாற்றும் ஆல்பம் இணையத்தில் வைரலான நிலையில் தற்போது தமிழ் குறித்து ஏ.ஆர் ரஹ்மான் கூறிய கருத்து இணையத்தில் வைரலாகிவருகிறது.