திமுகவில் இணையும் காயத்ரி? சபரீசனுடன் சந்திப்பு - பரபரப்பு தகவல்!
முதலமைச்சர் மருமகன் சபரீசன் உடன் காயத்ரி ரகுராம் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயத்ரி ரகுராம்
பாஜகவில் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார் காயத்ரி ரகுராம். நிர்வாகிகளை தன்னிச்சையாக நீக்கியதால் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதனையடுத்து வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
அதிலிருந்தும் காயத்ரி நீக்கப்பட்டார். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை ஹோட்டலில் சந்தித்து ஒரு மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருப்பதாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கூறியிருந்தார்.
திமுகவில்..?
இதனால், திமுகவில் அவர் இணையப்போவதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து, ’’முட்டாளே அது என் நண்பரின் பிறந்தநாள். அவர் என்னையும் சில பேசன் நண்பர்களையும் அழைத்து இருந்தார் . சபரீசன் உள்ளிட்ட பலரையும் அழைத்து இருக்கின்றார்.
அது ஒரு எதிர்பாராத சம்பவம். ஹாய் மற்றும் ஹலோ சொல்வது என் டீசென்சி. முகத்தை திருப்பிக் கொண்டு போக நான் முதிர்ச்சியற்றவள் அல்ல. பிரதமர் மோடி கூட அரசு விவகாரங்களில் ஸ்டாலினை சந்திக்கிறார்’’ என காயத்ரி பதிலடி கொடுத்துள்ளார்.