நண்பனுக்கு மைதானத்திலேயே திருமண ப்ரபோஸ் செய்த கால்பந்து வீரர் - தீயாய் பரவும் புகைப்படம்!
கால்பந்து வீரர் தனது நண்பருக்கு திருமண ப்ரபோஸ் செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஜோசுவா ஜான் கேவல்லோ
ஆஸ்திரேலிய தொழில்முறை கால்பந்து வீரர் ஜோசுவா ஜான் கேவல்லோ. இவர் ஏ லீக் மென் கிளப் அடிலெய்டு யுனைடெட்டின் மத்திய மிட்பீல்டராக விளையாடுகிறார். இவர் தனது நண்பரான லெய்டனை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார்.
தொடர்ந்து, சமீபத்தில் கால்பந்து மைதானத்தில் வைத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜோசுவா ப்ரபோஸ் செய்ய அதனால் லெய்டன் வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
வைரல் ஃபோட்டோ
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கால்பந்து வீரர் ஜோசுவா ஜான், என் வருங்கால மனைவியுடன் இந்த ஆண்டு தொடங்குகிறது. இந்த ஆச்சரியத்தை ஏற்படுத்த உதவிய அடிலெய்டு யுனைடெட் நிறுவனத்திற்கு நன்றி.
உங்கள் முடிவில்லாத ஆதரவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் கால்பந்தில் ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்கியுள்ளீர்கள்.
இது சாத்தியம் என்று நான் கனவிலும் நினைக்காத ஒன்று. மேலும் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் உண்மையாக வாழ ஊக்குவித்தேன். இந்த சிறப்பு தருணத்தை ஆடுகளத்தில் பகிர்ந்து கொள்வது சரியாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.