‘’கங்குலி இத செய்துதான் ஆகணும் ‘’ - கங்குலி - கோலி மோதல் , களமிறங்கிய முன்னாள் வீரர்

ganguly viratkholi gavaskar
By Irumporai Dec 16, 2021 05:31 AM GMT
Report

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கியது முதல் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்திய அணியின் கேப்டன்சி விவகாரத்தில் யார் பொய் கூறுவது என விளக்கம் கொடுக்கவேண்டும் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

 இந்த நிலையில் இந்த விவகாரத்தில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தலையிட்டுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், விராட் கோலியின் கருத்துக்கள் பிசிசிஐ-யை எந்த விதத்திலும் சர்ச்சைக்குள் கொண்டு வரவில்லை.

அதே சமயம், கங்குலி எனும் தனி நபர் விராட் கோலியிடம் எப்போது, பதவி விலக வேண்டாம் எனத்தெரிவித்தார் என்பது தெரியவேண்டும்.

பிசிசிஐ தலைவராக அதனை விளக்க வேண்டியது கங்குலியின் கடமை முக்கியமான முடிவுகளை உயர் அதிகாரிகள் எடுக்கும் போது வெளிப்படையான விளக்கத்தை கொடுத்தால் தான் சில விஷயங்களுக்கு சரி வரும்.

அப்படி இல்லையென்றால் ஒரு அறிக்கை வெளியிட்டாவது இந்த பிரச்சினைக்கு முடிவு கொண்டு வரவேண்டும் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.