செக்க சிவந்த வானம் படத்தை இயக்கியது கெளதம் மேனனா? வைரலாகும் வீடியோ

Viral Video Gautham Vasudev Menon
By Irumporai 1 வாரம் முன்

சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.

செக்க சிவந்த வானம் 

ந்த படத்தின் ப்ரொமோஷனுக்காக இயக்குநர் ஜிவிஎம் பல ஊர்களில் பல செய்தி ஊடகங்களுக்கு நேர்காணல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு அவர் நேர்காணல் கொடுத்த போது தொகுப்பாளர் கேட்ட தவறான கேள்விக்கு கெளதம் மேனன் கொடுத்த பதில்தான் தற்போது இணையத்தில் வைரல் என்றே கூறலாம்.

செக்க சிவந்த வானம் படத்தை இயக்கியது கெளதம் மேனனா? வைரலாகும் வீடியோ | Gautham Menon For Chekka Sivandha Vanam Movie

அதில் அந்த தொகுப்பாளர் கெளதமிடம் செக்க சிவந்த வானம் படத்தை எப்படி எடுத்தீர்கள்? அதில் விஜய் சேதுபதி, சிம்பு என பலரை நடிக்க வைக்க வேண்டியது இருந்ததே? என கேட்டார்.

மணிரத்னமாக மாறிய கெளதம்

அதற்கு கெளதம் எந்த சலசலப்பும் இல்லாமல், "அது சவாலாக இருந்தது. சிம்பு, விஜய் சேதுபதி, அருண்விஜய், அரவிந்த் சாமி ஆகியோரின் நாட்களை வாங்குவது கடினம் தான்.

அவர்கள் பிசியான நடிகர்கள். ஆனால் நான் மணிரத்னம் என்பதனால் அவர்கள் சரியாக வருகை தந்தனர். அதிகாலை 4,5 மணிக்கெல்லாம் நாங்கள் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவோம். சிம்பு உட்பட அனைவரும் செட்டில் இருப்பார்கள்.

கௌதம் வாசுதேவ் மேனன் படத்துக்கு சிம்பு சரியான நேரத்து வரவில்லை என்றாலும் நான் மணி சார் என்பதால் வந்துவிடுவார். அது ஒரு நல்ல அனுபவம்" என நகைச்சுவையாக கூறினார்.

தான் இயக்கிய படங்கள் பற்றிக் கூட தெரியாமல் கேள்விகேட்கும் தொகுப்பாளரிடம் கோபப்படாமல், அதனை நகைச்சுவையாக மாற்றியிருந்தார் ஜிவிஎம். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.