மாஸ் புகைப்படம் வெளியிட்டு...; கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனுக்கு வாழ்த்து தெரிவித்த புகழ்...!
புகைப்படம் வெளியிட்டு, கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் தம்பதிக்கு ‘குக் வித் கோமாளி’ புகழ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் கவுதம் கார்த்திக்
பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன்தான் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை மஞ்சிமா மோகன்
நடிகை மஞ்சிமா மோகன் மலையாள நடிகையாவார். இவர் சிம்பு நடிப்பில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து, ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது இவருக்கும், நடிகர் கவுதம் கார்த்திக்கும் காதல் மலர்ந்தது.
திருமணம்
சமீபத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகனின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் ஜீவா, விக்ரம் பிரபு, ஆர்.ஜே.பாலாஜி, ஆர்.கே.சுரேஷ், நடிகை பிரியா பவானி சங்கர், இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
வாழ்த்து தெரிவித்த புகழ்
இந்நிலையில், தன் இன்ஸ்டா பக்கத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் புகைப்படத்தை வெளியிட்டு கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், புகைப்படம் வந்துவிட்டது?திருமண பந்தத்தில் இணைந்திருக்கும் @gauthamramkarthik @manjimamohan விற்கு வாழ்த்துக்கள். இணையர் இருவரும் இன்பம், துன்பத்தை பகிர்ந்து, ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல், மன கசப்புகளை விட்டெரிந்து இன்புற்று வாழ மனதார வாழ்த்துகிறேன்...❤️ என்று பதிவிட்டுள்ளார்.