திருமணத்திற்கு முன்பே அப்பாவான கவுதம் கார்த்திக்….வெளியான புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள்

Gautham Karthik Manjima Mohan Marriage Viral Photos
By Nandhini Nov 28, 2022 01:27 PM GMT
Report
315 Shares

திருமணத்திற்கு முன்பே அப்பாவான கவுதம் கார்த்திக் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் கவுதம் கார்த்திக்

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன்தான் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மஞ்சிமா மோகன்

நடிகை மஞ்சிமா மோகன் மலையாள நடிகையாவர். இவர் சிம்பு நடிப்பில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து, ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது இவருக்கும், நடிகர் கவுதம் கார்த்திக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் இதனையடுத்து, கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகனின் திருமணம் இன்று நல்லபடியாக நடந்துள்ளது.

திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இத்தம்பதியினருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

gautham-karthik-manjima-mohan

திருமணத்திற்கு முன்பே அப்பாவான கவுதம் கார்த்திக்

இந்நிலையில், கவுதம் கார்த்திக்கிற்கு இன்று தான் திருமணம் நடந்துள்ளது. ஆனால், அவர் திருமணத்திற்கு முன்பே அப்பாவாகிவிட்டார் என்று வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில், அவர் ஒரு பூனைக்கு அப்பாவாகியிருக்கிறார்.

முதலில் ஷாக்கான ரசிகர்கள், புகைப்படத்தில் இருக்கும் பூனையைத்தான் மகள் என்று குறிப்பிட்டுள்ளார் என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் உங்க லூனா ரொம்ப க்யூட்டாக இருக்கு... என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.