இனி கௌதம் கார்த்திக் இல்லையாம் - பெயரை மாற்றிய நடிகர் கார்த்திக் மகன்

Gautham Karthik Karthik Tamil Actors
By Karthikraja Feb 22, 2025 01:30 PM GMT
Report

கௌதம் நடிகர் கௌதம் கார்த்திக் தனது பெயரை மாற்றியுள்ளார்.

கௌதம் கார்த்திக்

1980, 90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். 2000 க்கு பிறகு அரசியலில் இறங்கிய இவர், சினிமாக்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக்கொண்டார். 

கௌதம் ராம் கார்த்திக் - Gautham Ram Karthik

2013 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக்.

பெயர் மாற்றம்

2019 ஆம் ஆண்டு தேவராட்டம் படத்தில் மஞ்சிமா மோகனுடன் நடித்த போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 

கௌதம் ராம் கார்த்திக்

தற்போது கௌதம் கார்த்திக் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ள நிலையில் அதில் தனது பெயரை கௌதம் ராம் கார்த்திக் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது சமூகவலைத்தள கணக்குகளிலும் கௌதம் ராம் கார்த்திக்(Gautham Ram Karthik) என தனது பெயரை மாற்றியுள்ளார். 

ராம் என்பதை அவரின் தாத்தாவும் நடிகருமான முத்துராமன் பெயருக்காக இணைத்திருக்கலாம். சமீபத்தில் ஜெயம் ரவி என இனி என்னைஅழைக்க வேண்டாம் ரவி மோகன் என அழைக்குமாறு நடிகர் ரவி மோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது கௌதம் ராம் கார்த்திக்கும் தனது பெயரை மாற்றியுள்ளார்.