இனிமேல் இந்த வீரரை இந்திய அணியில் எடுக்காதீங்க - கடுப்பான கவுதம் காம்பீர்

ipl2022 venkateshiyer gauthamgambhir
3 மாதங்கள் முன்

வெங்கடேஷ் அய்யர் இன்னும் ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்கான முதிர்ச்சியை எட்டவில்லை என முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார். 

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால் 2 போட்டிகளில் விளையாடி 24 ரன்கள் மட்டுமே எடுத்த அவர், பந்து வீச்சில் விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை. இதனால் 3வது போட்டியில் வெங்கடேஷ் அய்யர் நீக்கப்பட்டார். 

ஹர்திக் பாண்டியாவின் சொதப்பல் மற்றும் காயம் காரணமாக அவருக்கு மாற்றாக வெங்கடேஷ் அய்யர் கருதப்பட்ட நிலையில், தொடர்ந்து சொதப்பியதால் ரசிகர்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். 

இந்நிலையில் வெங்கடேஷ் அய்யர் இன்னும் ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்கான முதிர்ச்சியை எட்டவில்லை என முன்னாள் இந்திய அணி வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.மேலும் அவரை டி20க்களில் மட்டுமே தேர்வு செய்யப்பட பரிசீலிக்க வேண்டும்.  7-8 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவரைப் பார்த்து சர்வதேச அளவில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது தவறானது எனவும் காம்பீர் கூறியுள்ளார். 

நீங்கள் ஒருநாள் போட்டிக்கு பரிசீலிக்கிறீர்கள் என்றால், அவரை மிடில் ஆர்டரில் விளையாட சொல்ல வேண்டும் எனவும் காம்பீர் தெரிவித்துள்ளார். 


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.