அதிமுக கையில் ராஜபாளையம் தொகுதி! நடிகை கௌதமி என்ன டுவிட் செய்திருக்கிறார்?

aiadmk gautami rajapalayam
By Jon Mar 11, 2021 05:14 AM GMT
Report

இராஜபாளையம் தொகுதி மக்கள் உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும், அதற்காக பாடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை கௌதமி. இராஜபாளையம் தொகுதியில் போட்டியிட கௌதமி திட்டமிட்டு இருந்தார் என்றும் அதற்காக அவர் சில மாதங்களாக அந்த பகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார் என்பதும் தெரிந்த ஒன்றே.

ஆனால் தற்போது இராஜபாளையம் தொகுதி அதிமுக வசம் உள்ளது, அங்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இராஜபாளையம் தொகுதி கிடைக்காத வருத்தத்தில் கெளதமி பதிவு செய்த உருக்கமான டுவிட்டில் கூறியிருப்பதாவது, இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னை பாவித்து கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள்.

என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்கு தலைவணங்கி, உங்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன். உங்கள் அன்பின் வாயிலாககிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன்.