போன்ல லவ் பண்றவங்களை நம்பாதீங்க: இயக்குநர் கௌதம் மேனன் அட்வைஸ்
போனில் லவ் பண்றவங்கள மட்டும் நம்பக்கூடாது என பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
ஸ்டைலிஷ் இயக்குநர் என பெயரெடுத்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் , நடுநிசி நாய்கள், வாரணம் ஆயிரம்,என்னை அறிந்தால், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், அச்சம் என்பது மடமையடா, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.
இதன்பின் தனது படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக முழு நேர நடிகராகவும் மாறி வருகிறார். குறிப்பாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ருத்ர தாண்டவம், செல்ஃபி போன்ற படங்களில் நடிப்பில் அசத்தியிருந்தார்.
இதனிடையே தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் போனில் லவ் பண்றவங்கள மட்டும் நம்பக்கூடாது எனவும், எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் கண்களைப் பார்த்துப் பேச வேண்டும் அப்போதுதான் அந்த பீல் உங்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் போனில் சாரி சொல்வதை விடவும் நேரில் போய் உங்கள் காதலரிடன் கண்களைப் பார்த்து சொல்லிப் பாருங்கள் அந்த ஃபீலே தனி எனவும் அவர் கூறியுள்ளார்.