‘பல உறக்கமில்லா இரவுகளை தந்துவிட்டார்’, தோனியை வம்பிழுத்த கௌதம் கம்பீர் - காரணம் என்ன?
ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்.
நடப்பாண்டு ஐபிஎல்-இல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் போட்டிக்கான திட்டங்களை வகுக்கும் வேளைகளில் தற்போது அவர் முழுமையாக இறங்கியுள்ளார்.
லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், ஏற்கனவே பேட்டிங் பயிற்சியை தொடங்கிவிட்ட நிலையில், பிளேயிங் லெவன்-இல் ஆடவுள்ள வீரர்கள்,
எந்த வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்துவது போன்ற யுத்தியை கம்பீர் வகுத்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த கவுதம் கம்பீரிடம், ஐபிஎல் தொடரில் சிறந்த கேப்டன் மற்றும் வீரர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கம்பீர், ரோகித் ஷர்மா தான் சிறந்த கேப்டன் மற்றும் சிறந்த வீரர்.
கொல்கத்தா, மும்பை அணிகள் மோதும் போது, எனக்கு பல உறக்கமில்லா இரவுகளை கொடுத்துவிட்டார். ரோகித் ஷர்மா போன்று எந்த கேப்டனும் எனக்கு நெருக்கடி தந்தது இல்லை.
அதே போல் கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ் போன்ற வீரர்களை விட ரோகித் தான் சிறந்த வீரர். ஐபிஎல் தொடரில் ரோகித் ஷர்மாவை விட வெற்றிக்கரமான கேப்டன், வீரர் என்று யாருமில்லை என தெரிவித்துள்ளார்.
மும்பை அணி அதிக முறை ஐபிஎல் கோப்பையை வாங்கி இருந்தாலும், அதற்கு முன் அந்த பெருமையை பெற்ற அணி தல தோனி தலைமையில் ஆடிய சிஎஸ்கே அணி தான்.
தோனி மீதான வன்மத்தில் தான் அவரது பெயரை கவுதம் கம்பீர் குறிப்பிடாமல் ரோகித்தை புகழ்ந்து பேசியுள்ளார்.
அவரின் இந்த பதில் தோனியை வம்பிழுக்கும் நோக்கில் இருப்பதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.