‘என் தூக்கத்தை கெடுத்த ஒரே கேப்டன் ரோஹித் ஷர்மா தான்...’ - கவுதம் கம்பீர் பேட்டி...!
என் தூக்கத்தை கெடுத்த ஒரே கேப்டன் ரோஹித் ஷர்மா தான் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
சாதனைப் படைத்த ரோகித் சர்மா -
சமீபத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடியது. இப்போட்டியில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி 171 பந்துகளில் ரோகித் சதம் அடித்து அசத்தினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய அவர் 120 ரன்களில் ஆட்டம் இழந்தார். இப்போட்டியில், அடித்த சதத்தால் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்தார். கேப்டனாக டெஸ்ட், ஒரு நாள், டி20 என அனைத்து போட்டிகளிலும் சதம் அடித்து முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். சர்வதேச அளவில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் விளாசிய 4வது கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கவுதம் கம்பீர் பேட்டி
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், ரோஹித் சர்மா குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஐபிஎல் தொடரில் எனது தூக்கத்தை கெடுத்த ஒரே கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் தான் என்றும், வேறு யார் குறித்தும் நான் அதிகம் சிந்திக்கவும் மாட்டேன். பெரிதாக எந்த திட்டமும் மனதில் வைத்திருக்க மாட்டேன் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.