நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ - கம் பேக் கொடுத்த கம்பீர் , ஷாக் கொடுத்த புதிய அணி..பின்னணி என்ன?
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் ஜனவரியில் நடைபெறவுள்ளது. இந்த முறை புதிதாக வந்துள்ள 2 அணிகளும், சிறந்த வீரர்களுடன் களமிறங்க திட்டம் தீட்டி வருகிறது.
இந்நிலையில் இவை அனைத்திற்கும் மேலாக அதிரடி நடவடிக்கை ஒன்றையும் லக்னோ அணி எடுத்துள்ளது. அந்த அணியின் ஆலோசகராக செயல்பட இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டுகளில் இந்திய அணி உலகக்கோப்பைகளை வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்தவர் கம்பீர். இதுமட்டுமல்லாமல் கொல்கத்தா அணியையும் வழிநடத்தி கோப்பையை வென்றுக்கொடுத்தார்.
இவ்வளவு அனுபவம் கொண்டவரை ஆலோசகராக நியமித்து மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது லக்னோ அணி.
ஏற்கனவே கே.எல்.ராகுலின் கேப்டன்சி மற்றும் ஆண்டி ஃப்ளவரின் கோச்சிங் என அட்டகாசமான் ஃபார்மில் இருந்தது. தற்போது கம்பீரும் இணைந்திருப்பதால் ஐபிஎல் கலக்கப்போகிறது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.