ஐபிஎல்-ல் நான் வேலை செய்கிறேன் என்று சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை... - கம்பீர்

By Nandhini Jun 04, 2022 01:28 PM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேனாக கவுதம் கம்பீர் 2003-ல் அணியில் அறிமுகமானார்.

இந்திய கிரிக்கெட் அணியில் சேவாகிற்கு இணையாக அதிரடியாக ஆடக்கூடியவர் கவுதம் கம்பீர். சேவாக் - கவுதம் கம்பீர் கூட்டணி வெகு சிறப்பாக அமையும்.

சேவாக் ஆடும் போக்கை நன்றாக கவனித்து நிதானமாக ஆடுவார் கம்பீர்.

சச்சின் - கங்குலிக்கு அடுத்ததாக இந்தியாவிற்கு கிடைத்த வலது கை என்றால் அது சேவாக் - கம்பீர் துவக்க ஆட்டக்கார ஜோடி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

கடந்த 2007ம் ஆண்டு மற்றும் 2011ம் ஆண்டு கேப்டன் தோனி தலைமையில் உலகக் கோப்பை வாங்க கவுதம் கம்பீரும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தார். கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கௌதம் கம்பீர் பா.ஜ.க-வின் கிழக்கு டெல்லி எம்.பி-யாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் கவுதம் கம்பீருக்கு காஷ்மீர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கம்பீர் பேட்டி

இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் நிருபர் ஒருவர் கவுதம் கம்பீரிடம் ஒரு கேள்வியை கேட்டார். நீங்கள் பாஜக எம்.பி.யாக இருந்தும் ஏன் ஐ.பி.எல்.ல் பணியாற்றுகிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு கவுதம் கம்பீர் பேசுகையில், ‘ஐபிஎல்-ல் நான் வேலை செய்கிறேன் என்று சொல்வதில் எனக்கு வெட்கமில்லை. ஏனென்றால், நான் 5000 பேருக்கு உணவளிக்க ஆண்டுதோறும் ரூ.2.75 கோடி செலவிடுகிறேன். ஐ.பி.எல்.லிருந்து கிடைக்கும் பணத்தை இதற்கு பயன்படுத்துகிறேன்’ என்று கூறினார். 

ஐபிஎல்-ல் நான் வேலை செய்கிறேன் என்று சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை... - கம்பீர் | Gautam Gambhir Interview