தினேஷ் கார்த்திக் வேண்டவே வேண்டாம்”.. கவுதம் கம்பீர் கருத்தால் சர்ச்சை
தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு தரக்கூடாது என்பது போல முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக்
டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது இதில் மிகவும் முக்கியமான ஒன்று ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் பிரச்சினை தான்.
இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவருக்கு மட்டுமே ப்ளேயிங் 11ல் வாய்ப்பு தர முடியும். தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்துகிறார்.
ஆனால் இடதுகை வீரர் என வாய்ப்பு பெறும் பண்ட், சொதப்பிவிடுகிறார். இதுதான் ஆசிய கோப்பையில் நடந்தது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பையிலும் இருவரில் யாருக்கு தான் வாய்ப்பு என்ற குழப்பம் எழுந்துள்ளது.
ஜடேஜாவுக்கு மாற்றாக மற்றொரு இடதுகை ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல் கொண்டு வரப்பட்டுள்ளதால், தினேஷ் கார்த்திக்கிற்கு தான் வாய்ப்பு கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் பண்ட்-க்கு ஆதரவாக கவுதம் கம்பீர் களமிறங்கியுள்ளார்.
கம்பீர் கருத்தால் சர்ச்சை
இதுகுறித்து பேசிய அவர், பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக்கை ஒரே அணியில் விளையாட வைக்க முடியாது. அப்படி நடந்தால் 6வது பவுலர் இன்றி இந்தியா விளையாட வேண்டியிருக்கும். இல்லையென்றால் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாரேனும் ஒருவரை நீக்கிவிட்டு, பண்ட்-ஐ ஓப்பனிங்கில் ஆட வைக்கலாம் இதுதான் ஒரே வழி.
ஒருவருக்குதான் வாய்ப்பு
ஒருவருக்கு தான் வாய்ப்பு என்றால், பண்ட்-க்கு தான் தர வேண்டும். ஏனென்றால் டாப் ஆர்டரில் விளையாட வேண்டிய தேவை இருந்தாலும் கூட தினேஷ் கார்த்திக் அதற்கு ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் பண்ட் ஓப்பனிங், மிடில் ஆர்டர், லோயர் ஆர்டர் என அனைத்து இடத்திலும் விளையாடுகிறார். விக்கெட் கீப்பர் டாப் ஆர்டரில் விளையாடும் நம்பிக்கை வேண்டும். அது பண்ட்-யிடம் பார்த்தேன். எனவே அவருக்கு தான் வாய்ப்பு தர வேண்டும் என கம்பீர் கூறியுள்ளார்.