அதானி குழும விவகாரம் - மக்களவையில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் முழக்கம்....!
அதானி குழும விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை -
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி குழும நிறுவனங்களை "வெட்கக்கேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டதை அடுத்து, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரியத் தொடங்கியது.
இதனையடுத்து, அதானி குழுமம் ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. "பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை" என்று அதானி குழுமம் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது.
பணக்காரர் பட்டத்தை இழந்த அதானி
அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி நேற்று ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை இழந்துள்ளார். அமெரிக்காவை தளமாகக் கொண்ட குறுகிய விற்பனையாளரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையின் பின்னர் மொத்தம் 74 பில்லியன் டாலர்களை கவுதம் அதானி இழந்துள்ளார்.
நேற்று அதானி எண்டர்பிரைசஸ் 5% சரிந்தது. அதானி பவர் 5% சரிந்தது. அதானி மொத்த எரிவாயு 10% குறைந்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து அதானி நிறுவனம் 27 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பங்கு விற்பனையை நிறுத்திய அதானி
இந்நிறுவனத்தின் பங்குகள் இன்று சுமார் 30% சரிந்தது. இதனையடுத்து, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் அதன் பங்கு விற்பனையை நிறுத்துவதாக தற்போது அறிவித்துள்ளது. அதன் முழு சந்தா ₹20,000 கோடி FPOஐ நிறுத்தியுள்ளது. தொடர்ந்து சரிவை சந்தித்து வந்ததால், இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்
அதானி குழும விவகாரம் தொடர்பாக, உடனடியாக விவாதிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். எதிக்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
#WATCH | After a fully subscribed FPO, yday’s decision of its withdrawal would've surprised many. But considering volatility of market seen yday, board strongly felt that it wouldn't be morally correct to proceed with FPO:Gautam Adani, Chairman, Adani Group
— ANI (@ANI) February 2, 2023
(Source: Adani Group) pic.twitter.com/wCfTSJTbbA