அடேங்கப்பா... இத்தகை கோடி வங்கி கடனா...? அதானி குழுமம் வங்கிய வங்கி கடன்கள் வெளியீடு....!
அதானி குழுமம் வங்கிய வங்கி கடன்களை வங்கிகள் தற்போது வெளியிட்டு வருகின்றன.
மாபெரும் சரிவை சந்தித்த அதானி
அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச், அதானி குழும நிறுவனங்களை "வெட்கக்கேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டதை அடுத்து, பங்குகள் விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது.
இதனையடுத்து, அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி நேற்று ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பட்டத்தை இழந்துள்ளார்.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட குறுகிய விற்பனையாளரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையின் பின்னர் மொத்தம் 74 பில்லியன் டாலர்களை கவுதம் அதானி இழந்துள்ளார்.
இந்நிறுவனத்தின் பங்குகள் இன்றும் சுமார் 30% சரிந்தது. இதனையடுத்து, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் அதன் பங்கு விற்பனையை நிறுத்துவதாக தற்போது அறிவித்துள்ளது.
அதன் முழு சந்தா ₹20,000 கோடி FPOஐ நிறுத்தியுள்ளது. இதனையடுத்து, அதிபர் கவுதம் அதானி தலைமையிலான குழுமம் 2.5 பில்லியன் டாலர் பங்கை நிறுத்தியதையடுத்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று சரிந்தன.
ரிசர்வ் வங்கி உத்தரவு
அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும் குறித்தும், அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரத்தை தெரிவிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அதானி குழுமம் வாங்கிய கடன்கள் -
தற்போது அதானி குழுமம் வாங்கிய கடன் குறித்த விவரங்கள் தற்போது வங்கிகள் வெளியிட்டு வருகின்றன.
அதானி குழுமத்துக்கு முன்னணி வங்கிகள் வழங்கிய கடன்கள் -
1.எஸ்.பி.ஐ. வங்கி - ரூ.21,375 கோடி
2. இண்டஸ்இண்ட் வங்கி - ரூ.14,500 கோடி,
3. பஞ்சாப் நேஷனல் வங்கி - ரூ.7000 கோடி

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.