உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு - 2ம் இடத்திலிருந்து மீண்டும் 3-ம் இடத்திற்கு சென்ற அதானி...!

India Gautam Adani
By Nandhini Sep 27, 2022 08:10 AM GMT
Report

வெளியான உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்திலிருந்து மீண்டும் 3-ம் இடத்திற்கு கவுதம் அதானி சென்றுள்ளார். 

கவுதம் அதானி

இந்தியாவில் கோடீஸ்வர தொழிலதிபராக வலம் வருபவர் கவுதம் அதானி. இவர் அதானி குழுமம் மற்றும் அதானி அறக்கட்டளையின் நிறுவனராகவும், தலைவராகவும் இருந்து வருகிறார். அதானி குழுமம், வேளாண்மை, பாதுகாப்புத் துறை, துறைமுகம், பெயர்ச்சியியல், எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

2ம் இடத்தைப் பிடித்த அதானி

கடந்த செம்டம்பர் 15ம் தேதி போர்ப்ஸ் நிறுவனத்தின் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், கவுதம் அதானி குடும்பத்தின் சொத்து $155B பில்லியன் அமெரிக்க டாலர் என கணித்தது. இதனையடுத்து, கவுதம் அதானி இந்தியாவின் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்தை பிடித்தார்.

மீண்டும் 3-ம் இடத்திற்கு சென்ற அதானி

இந்நிலையில், உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் இருந்த அதானி, தற்போது 3ம் இடத்திற்கு சென்றுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், மீண்டும் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

Gautam Adani