பெட்ரோல் விலை அதிகரிப்பு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல : விஜயகாந்த் கண்டணம்

india tamilnadu vijayakanth petrolprice
By Irumporai Jun 11, 2021 11:09 AM GMT
Report

நாட்டில் பெட்ரோல் விலை மிக அதிக அளவில் உயர்ந்து கொண்டே செல்வது பொது மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

நாடு முழுவதும் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்துவிட்ட நிலையில், தமிழகத்திலும் 100 ரூபாயை கடந்து விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆகவே இந்த நிலையில், பெட்ரோல் விலையை உயர்த்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது.

ஆகவே பொதுமக்களின் நலன் கருதி பெட்ரோல் விலையை குறைக்க மத்திய மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது அறிக்கையில் விஜயாகந்த் தெரிவித்துள்ளார்.