வீடுகளில் பைப் லைன் மூலம் கேஸ்; அதுவும் தமிழகத்தில்.. அரசு திட்டம்!
வீடுகளுக்கு பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஸ் விநியோகம்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரிய தலைவர் அனில்குமார் ஜெயின் சென்னையின் பேட்டி ஒன்றை அளித்தார்.
அதில், உலகில் இயற்கை எரிவாயு பயன்பாடு 25 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியாவில் வெறும் 6 சதவீதமாகவே உள்ளது. வரும் 2030க்குள் இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுகள்: ஓ.என்.ஜி.சி நிறுவன விண்ணப்பத்தை அரசு நிராகரிக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்!
மத்திய அரசு திட்டம்
தமிழகத்தில் எண்ணுார், கேரளாவில் கொச்சி உட்பட பல இடங்களில், திரவ நிலை எரிவாயு முனையம் அமைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து கப்பல்களில், இந்த முனையங்களுக்கு திரவ நிலையில் இயற்கை எரிவாயுவை எடுத்து கொண்டு வருகிறோம். அந்த எரிவாயு, இயற்கை எரிவாயுவாக மாற்றப்படுகிறது.
அதை, குழாய் வழித்தடத்தில் வினியோகம் செய்ய, 'சிட்டிகாஸ் டிஸ்ட்ரிபியூஷன்' என்ற வினியோக நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம். அந்நிறுவனங்கள், குழாய் வழித்தடத்தில் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு இயற்கை எரிவாயுவாகவும்; சி.என்.ஜி., மையங்கள் வாயிலாக வாகனங்களுக்கும், சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும் வினியோகம் செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் இயற்கை எரிவாயுவை வினியோகிக்க, 'டோரன்ட் காஸ், அதானி, ஏஜி அண்டு பி' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம். தற்போது தமிழகத்தில் 17,000 வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. வரும் 2030க்குள், 2.20 கோடி வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம்.
உள்ளாட்சி அமைப்புகள், குழாய் வழித்தடம் அமைக்க விரைந்து அனுமதி வழங்க வேண்டும். இயற்கை எரிவாயு பயன்பாடு தொடர்பாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.