குழந்தைகளுக்கு ஆஸ்துமாவை உண்டாக்கும் கேஸ் ஸ்டவ் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
கேஸ் அடுப்பு பயன்பாடு குழந்தைகளுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடியது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கேஸ் அடுப்பு
International Journal of Environmental Research and Public Health. அந்த ஆய்வறிக்கையின்படி அமெரிக்காவில் 12.7% குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் ஸ்டவ்தான் காரணம் என தெரியவந்துள்ளது.
அந்நாட்டு புற்றுநோய் ஆய்வு நிறுவனமும் இதனை ஒப்புக்கொண்டுள்ளது. கேஸ் ஸ்டவ்கள் மீத்தேன் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடை வெளியேற்றுவதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது.
ஆஸ்துமா
அதிலும் குறிப்பாக 20 ஆண்டுகளில் 5 லட்சம் கார்கள் வெளியேற்றும் கரியமிலவாயுவை விட ஓராண்டில் கேஸ் ஸ்டவ்கள் வெளியேற்றும் மீத்தேன் வாயுக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை எனவும் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவில் முன்னதாக ஆகஸ்ட் 2022-ல் பைடன் ஆட்சியில் பணவீக்க குறைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, அந்த சட்டத்தின்படி கேஸ் ஸ்டவ்க்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்டவ் பயன்படுத்துவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி நியூயார்க், கலிஃபோர்னியா போன்ற பெருநகரங்களில் ஆபத்து விளைவிக்கும் வாயுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டவற்றை கட்டடத் தொழிலில் தடை செய்யும் சட்டமும் கொண்டு வரப்பட்டது.