பெண்களுக்கு ரூ.1000; 2 கேஸ் சிலிண்டர், யார் பெயரில்? அரசு அதிரடி சர்வே!
பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உரிமைத்தொகை
பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகையை வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்னப்பங்கள் குவிய தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஒரு கேஸ் சிலிண்டரா? 2 கேஸ் சிலிண்டரா? அது யார் பெயர்களில் உள்ளது? என்பதையெல்லாம் நேரில் சென்று ஆய்வுப்பணிகள் தொடங்கியுள்ளது.
அரசு ஆலோசனை
இது நிறைவடைந்த பின் விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் கிடைக்கும் என்கின்றனர். மேலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் ஆதரவற்றோர், முதியோர், கூலி வேலை பார்ப்பவர்கள், நடைபாதை வியாபாரிகள், மீன் விற்பவர்கள் என பலரும், 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர்.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
அதில், நிதித்துறை, வருவாய்த்துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன்
ஆலோசனை நடைபெறவுள்ளது.