அதிகரித்து கொண்டிருக்கும் சிலிண்டர் விலை - அதிர்ச்சியில் தாய்மார்கள்!
rate
hike
gas cylinder
By Anupriyamkumaresan
வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை, இம்மாதம் 25.50 ரூபாய் உயர்த்தப்பட்டு 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப மாதந் தோறும், உள்நாட்டில் சமையல் காஸ் சிலிண்டர்விலையில் மாற்றம்செய்யப்படுகிறது.
தமிழகத்தில், கடந்த மாதம் சிலிண்டரின் விலை 825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இம்மாதம் அதன் விலை 25.50 ரூபாய் உயர்ந்து, 850.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் 1,603 ரூபாயாக இருந்த வணிக சிலிண்டர் விலை 84.50 ரூபாய் உயர்ந்து, 1,687.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றம் பொதுமக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.