வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு -அதிரடியாக அறிவித்த மத்திய அரசு.

Tamil nadu India LPG cylinder
By Karthick Aug 29, 2023 11:14 AM GMT
Report

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

200 ரூபாய் குறைப்பு 

தற்போது வீட்டு பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி சிலிண்டரின் விலை மே மாதத்தில் இருமுறையும், ஜூலை மாதத்தில் 50 ரூபாய் விலை அதிகரிக்கப்பட்டு நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சென்னையில் 1068.50 ருபாயாகவும், டெல்லியில் 1053 ரூபாயாகவும், மும்பையில் 1052.50 ரூபாயாகவும், தற்போது கேஸ் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

gas-cylinder-priced-reduced-by-200-rs

இந்நிலையில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின்போது நாடெங்கும் கேஸ் விலையில் 200 ரூபாய் குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  ஒட்டு மொத்தமாக கேஸ் சிலிண்டரின் விலையை குறைப்பு செய்வதன் மூலமாக அரசுக்கு ரூ. 7500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், கேஸ் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை குறைந்த போதிலும், சிலிண்டரின் விலை குறைக்கப்படாமல் இருந்து வந்தது.

தேர்தலுக்கான நடவடிக்கையா? 

இந்த ஆண்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்களும், அடுத்த ஆண்டின் முதல் பகுதியில் நாடாளுமன்ற தேர்தலும் நடக்கவிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.