போர் எதிரொலி: தமிழகத்தில் சிலிண்டர் விலை உயர்ந்தது
ஈரான் இஸ்ரேல் போர் எதிரொலியாக வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பதிலுக்கு ஈரானும் அமெரிக்க தளங்களை குறிவைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இதனால் உலகளவில் எரிபொருள் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து ஒரு சிலிண்டர் ரூ.928.50ஆக விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்து ஒரு சிலிண்டர் ரூ.2.043.50ஆக விற்பனை செய்யப்படுகிறது.
மூன்று வாரத்திற்கான தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதால் விலையேற்றம் இருக்காது என அறிவிக்கப்பட்ட நிலையில் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
