சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 15 உயர்ந்து ரூ. 915 க்கு விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய வற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது.
இதில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றுகின்றனர். காஸ் சிலிண்டர் விலை மாதத்திற்கு 2 முறை மாற்றப்படுகிறது.
இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (அக்டோபர்) காஸ் சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.
அதில், நாடு முழுவதும் 14.2 கிலோ வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.15 உயர்த்தப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சிலிண்டரின் விலை உயர்வால் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி 4ம்தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15ம் தேதி 50 ரூபாயும் உயர்த்தப்பட்டன. தொடர்ந்து, பிப்ரவரி 25ம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்டது.
மார்ச் மாதம் 1ம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. ஒரு மாதத்தில் 125 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டது.
கடந்த ஓராண்டில் மட்டும் 300 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.