மகளிர் தின ஸ்பெஷல் - மோடியின் பரிசு...சிலிண்டர் விலை குறைப்பு..!

Narendra Modi LPG cylinder LPG cylinder price
By Karthick Mar 08, 2024 04:40 AM GMT
Report

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று நாட்டின் பிரதமர் மோடி பெண்களுக்காக பரிசு ஒன்றை அறிவித்துள்ளார்.

விலை குறைப்பு

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இன்று, மகளிர் தினத்தையொட்டி, எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.5 குறைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. 

gas-cylinder-price-cut-short-by-100-rs

இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக நமது நாரி சக்திக்கு பயனளிக்கும்.

திடீரென மீண்டும் குறைந்த சிலிண்டர் விலை; மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் - எவ்வளவு தெரியுமா?

திடீரென மீண்டும் குறைந்த சிலிண்டர் விலை; மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள் - எவ்வளவு தெரியுமா?

சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.


இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு ‘எளிதாக வாழ்வதை’ உறுதிசெய்வது என்ற எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் சிலிண்டரின் விலை ரூ.918-இல் இருந்து ரூ.818-க்கு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.