சேலம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயம்...!
கேஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேஸ் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து
சேலம், பொன்னம்மாபேட்டை அண்ணாநகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் ( 60). இவர் திருமணங்களுக்கு சமையல் வேலைக்கு ஆட்களை அனுப்பி வரும் தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் மாணிக்கம், அவரது குடும்பத்தினர் படுத்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை அவர் வீட்டில் திடீரென சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் மாடியிலிருந்த மாணிக்கம், அவரது குடும்பத்தினரும் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். சிலிண்டர் வெடித்ததில் மாடி பகுதி இடிந்து விழுந்தது.
7 பேர் படுகாயம்
இந்த விபத்தில் மாணிக்கம் (65 ), அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் பானு மற்றும் பானுவின் குழந்தை தீட்சிதா (4) மகள் பிரியா, இவரது குழந்தைகள் அவினேஷ் (7) பத்து நாள் ஆன குழந்தை உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயை அணைத்து, அங்கிருந்த கேஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேஸ் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.