3 இந்திய வீரர்களை பார்த்து பயப்படும் நியூசிலாந்து அணி - பயிற்சியாளர் சொன்ன உண்மை தகவல்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி குறித்து நியூசிலாந்து அணியின் பயிற்சியாளரான கிரே ஸ்டெட் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.இதில் முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றியது.இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று  தொடங்கவுள்ளது. 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்ததால், இந்த தொடரில் இந்திய அணியின் ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதனிடையே இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் குறித்து நியூசிலாந்து அணியின் பயிற்சியாளரான கிரே ஸ்டெட் கருத்து தெரிவித்துள்ளார்.  அதில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது நியூசிலாந்து வீரர்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிப்பது எளிதல்ல. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள். அவர்களை சமாளிப்பது நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும்.

ஆடுகளத்தின் தன்மையையும், போட்டியின் தன்மையையும் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்ப விளையாடுவதே நியூசிலாந்து அணிக்கு கை கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

You May Like This


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்