எகிறும் பூண்டு விலை; கிலோ இவ்வளவா? மக்கள் கலக்கம்!
பூண்டு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பூண்டு விலை
தமிழகத்தில் தற்போது வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், பூண்டின் விலையும் உயர்ந்து வருகிறது. தரவுகளின்படி பூண்டு உற்பத்தியில் தேசிய அளவில் மத்தியப்பிரதேசம் ஆண்டுக்கு 18.49 லட்சம் டன்னுடன் முதலிடத்திலும்,
4.16 லட்சம் டன்னுடன் ராஜஸ்தான் 2-ம் இடத்திலும், 2.27 லட்சம் டன்னுடன் 3-ம் இடத்திலும் உள்ளன. தமிழகம் ஆண்டுக்கு 7 ஆயிரத்து 150 டன் உற்பத்தியுடன் 13-வது இடத்தில் உள்ளது. எனவே, வட மாநிலங்களிலிருந்து கொண்டு வரும் செலவு உள்ளிட்ட காரணங்களால் பூண்டின் விலை தமிழகத்தில் எப்போதும் உச்சத்திலேயே இருந்து வருகிறது.
தொடர் உயர்வு
இந்நிலையில், பூண்டின் விலை கிலோ ரூ.380 ஆக விற்பனையாகி வருகிறது. பொடி பூண்டு தற்போது ரூ.205-லிருந்து ரூ.240 ஆகவும், லட்டு வகை பூண்டுரூ.330-லிருந்து ரூ.380 ஆகவும் உயர்ந்துள்ளது.
முதல்தர பூண்டு ரூ.440-லிருந்து ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. தமிழக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பூண்டு உற்பத்தி தொடர்பாக கூறுகையில், இந்தாண்டு, தோட்டக்கலைத்துறை சார்பில் பூண்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில்,
ரூ.18 லட்சம் செலவில் பூண்டு உற்பத்தி பரப்பை கூடுதலாக 150 ஹெக்டேர் அளவுக்கு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.