வரலாறு காணாத உயர்வு; பூண்டு விலை கிலோவுக்கு இவ்வளவா? காய்கறி விலை நிலவரம்!

Garlic Tamil nadu Vegetables Price Vegetable Price Today
By Sumathi Feb 16, 2024 07:12 AM GMT
Report

பூண்டு விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பூண்டு விலை

சமையலில் தினசரி பயன்படுத்தும் பூண்டு விலை தற்போது பெரும் உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிலோ பூண்டின் விலை சுமார் ரூ.500 முதல் ரூ.550 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

vegetables price

இதற்கு காரணமாக கடந்த ஆண்டில் தாமதமான பருவமழையால் ஆகஸ்டு மாதத்தில் பூண்டு விதைத்து ஜனவரி மாதத்தில் அறுவடை செய்ததால் பூண்டு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தேசிய விலங்கு, பறவை, பூ தெரியும் - இந்தியாவின் தேசிய காய்கறி எது தெரியுமா..?

தேசிய விலங்கு, பறவை, பூ தெரியும் - இந்தியாவின் தேசிய காய்கறி எது தெரியுமா..?

காய்கறிகளின் விலை நிலவரம்

காய்கறிகள் அனைத்தும் வெளி மாவட்டங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்தும், தென் மாவட்டங்களான தேனி, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து, சந்தைகளில் தக்காளி கிலோ ரூ. 22க்கும், வெங்காயம் ரூ.20க்கும் விற்கப்படுகிறது.

koyambedu market

பீட்ரூட் கிலோ ரூ.55, கேரட் கிலோ ரூ.75, இஞ்சி ரூ.110, காலிபிளவர் ஒரு கிலோ 25க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ ரூ.12க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.60க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ ரூ.40க்கும், முள்ளங்கி ஒரு கிலோ ரூ.15க்கும்,

பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ.50க்கும், புடலங்காய் ஒரு கிலோ ரூ.30க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தை மற்றும் மாசி மாதத்தில் சிறப்பான சுப முகூர்த்தம் வருவதினால் இந்த விலையேற்றம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.