கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை

 கோவை சிங்காநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகறாறில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சிங்காநல்லூரை அடுத்த கக்கன் நகரைச் சேர்ந்தவர் வசந்த்,இவர் இந்த பகுதியில் கஞ்சா மொத்த வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர் தனது நண்பர்கள் இருவருடன் செவ்வாய்க்கிழமை காலை பாரதிபுரம் அரிஜன காலனி பகுதிக்கு வந்துள்ளார்.

அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்ற சரவணன் என்பவரை கத்தியால் குத்தி உள்ளதாகத் தெரிகிறது. இதனை அடுத்து சரவணன் தன் நண்பர்கள் ஹரி உள்ளிட்டோருடன் சேர்ந்து வசந்தை இரும்பு தடிகளால் அடித்து கொலை செய்துள்ளனர்.

கஞ்சா வியாபாரிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக கிடைத்த தகவலையடுத்து சூலூர் போலீசார் விரைந்து வந்து வசந்தின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தப்பியோடிய சரவணன் வரி உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்