வீட்டை லாட்ஜாக மாற்றிய நடிகர் கஞ்சா கருப்பு - பரபரப்பு புகார்!
கஞ்சா கருப்பு வீட்டை லாட்ஜாக மாற்றியதாக உரிமையாளர் புகாரளித்துள்ளார்.
கஞ்சா கருப்பு
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இங்கு சூட்டிங்கின் போது வந்து தங்குவதாக தெரிகிறது. இந்நிலையில் கஞ்சா கருப்பு 3 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும், வீட்டை வேறு ஒரு நபருக்கு உள்வாடகைக்கு விட்டு,
உரிமையாளர் புகார்
மதுபானம் மற்றும் தகாத சம்பவங்கள் நடப்பதாகவும் வீட்டின் உரிமையாளர் ரமேஷ் போலீஸில் புகாரளித்துள்ளார். மேலும் கஞ்சா கருப்பு அளித்த புகாரில்,
நான் வீட்டில் இல்லாத சமயத்தில் உரிமையாளர் ரமேஷ் பூட்டை உடைத்து வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட முயற்சித்துள்ளார். தனது உடைமைகளையும் சேதப்படுத்தி உள்ளார்.
கலைமாமணி பட்டத்தையும் காணவில்லை. 1.5 லட்சம் ரூபாய் பணம் காணவில்லை எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீஸார் வீட்டை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.