கள்ளக்குறிச்சி கலவரம்; 13 பேர் மீது குண்டர் சட்டம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டதில் 13 பேர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கலவரம்
கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்ததை அடுத்து இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதியில் போராட்டம் நடைபெற்றது.
அதனை அடுத்து ஜூலை 17ஆம் தேதியில் போராட்டம் கலவரமாக மாறியது. இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டது.
இந்த கலவரம் தொடர்பாக சுமார் 410 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் ஜமீனில் வெளியே வந்தனர். குறிப்பிட்ட சிலர் மீது இன்னும் வழக்கு நடைபெற்று வருகிறது.
13 பேர் மீது குண்டர் சட்டம்
இதில் ஏற்கனவே 12 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில் தற்போது புதியதாக ஒருவர் மீதும் குண்டர் சட்டம் போடும் படி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தற்போது கள்ளக்குறிச்சி கனியமூர் பள்ளி கலவரத்தில் ஈடுப்பட்டதில் 13 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.