குளிக்க வரும் பெண்களை குறி வைத்த கும்பல் - 10 ஆயிரம் ஆபாச படங்கள்...தட்டி துாக்கிய போலீஸ்
ஜப்பான் நாட்டில் வெந்நீர் நீரூற்றுகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் உட்பட பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளங்களுக்கு விற்பனை செய்த மருத்துவர் உட்பட 17 பேர் கொண்ட ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீரூற்றுகளுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
அதிக குளிர்ச்சியான நாடுகள் பட்டியலில் ஜப்பான். இங்கு 12.5 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் பொதுமக்களில் அதிகமானவர்கள் வெந்நீர் நீரூற்றுகளை பயன்படுத்துகின்றன.
நிலத்தின் அடியில் உள்ள எரிமலைகளின் செயல்பாட்டால் இந்த வெந்நீர் நீருற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் மிகவும் பிரபலமான இந்த வெந்நீர் நீரூற்றுகளுக்கு தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்த நிலையில் வெந்நீர் நீரூற்றுகளுக்கு தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வெந்நீர் நீரூற்றுகளில் குளிக்கும் பெண்களை சிலர் ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
10 ஆயிரம் ஆபாச புகைப்படங்கள் - போலீசார் அதிர்ச்சி
இந்த அதிரடி சோதனையில், டாக்டர் ஒருவர் உட்பட 17 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து 10,000 பேரின் ஆபசமான புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட டாக்டர் தனது வயதிலிருந்து பெண்கள் வெந்நீர் நீரூற்றுகளில் குளிப்பதை சீக்ரெட்டாக படம் பிடித்து வருவதாகவும், நாடு முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட வெந்நீர் நீரூற்றுகளில் குளித்த பெண்களின் புகைப்படங்கள் அவர்களிடம் இருப்பதாகவும் அதை பல்வேறு இணையதளங்களுக்கு விற்பனை செய்த தகவலும் வெளியாகியுள்ளது.