ஏய், முட்டாள் வாய மூடு, இளையராஜா சர்ச்சை குறித்து கேட்ட நெறியாளரிடம் கத்தி கூச்சலிட்ட கங்கை அமரன்

Gangai Amaren Ilayaraaja Narendra Modi
By Irumporai May 04, 2022 10:36 AM GMT
Report

அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்ட விவகாரம் குறித்த சர்ச்சைக்குரிய கேள்வியால் கோபமான கங்கை அமரன் நிருபரை ஏய் வாய மூடு என்று ஒருமையில் திட்டிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியினை அம்பேத்கருடன் ஒப்பிட்டு முன்னுரை எழுதிய கருத்தால் கடந்த சில நாட்களாக இளையராஜா கடும் சர்ச்சையில் சிக்கினார். அதே சமயம் இளையராஜா இவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது அவரது சகோதரர் கங்கை அமரன் கூறினார்.

  இந்த நிலையில்  இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நெறியாளர் : முன்னுரையை நீங்கள் தான் எழுதியதாக தகவல் பரவி வருகிறது. அதை நீங்கள் எழுதினீர்களா? என நிருபர் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்வியால் கோவமடைந்த கங்கை அமரன். என்னை குற்றவாளி மாதிரி நீ எப்படி அந்த கேள்வி கேட்பா என்று ஆவேசமாக கத்தினார். செய்தியாளர் எவ்வளவோ அமைதியாக பேசிய போதும், கங்கை அமரன் செய்தியாளரை ஒருமையில் ஏய்...நீ வா போ என பேசினார்.

அந்த முன்னுரையை நான் தான் எழுதுனேன் என்ன பண்ணுவே... அப்படி பேசுறவன் எல்லாம் முட்டாள், அறிவே இல்லாத நாய் என்றார். மோடியை பற்றி பேசுவது என் இஷ்டம், எனக்கு பால்கோவா சாப்பிட கூட தான் பிடிக்கும். அது எப்படி பிடிக்காலானு நீ கேள்வி எழுப்ப முடியுமா? என்று போயா...வாயா ...என அந்த நிகழ்ச்சி நெறியாளரை திட்டிதீர்த்துவிட்டார்.

கங்கை அமரன் இவ்வாறு பேசியதைப்பார்த்த இணையவாசிகள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.