ஆந்திராவில் காவல் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து; வாகனங்கள் எரிந்து சேதம் - வைரலாகும் வீடியோ...!
ஆந்திர மாநிலம், கங்காதர நல்லூர் காவல் நிலையத்தில் இன்று அதிகாலை பலத்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவல் நிலையத்தில் வெடி விபத்து
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கங்காதராநெல்லூர் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில், கார் கதவுகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து தூள்தூளாகின.
மேலும், இந்த விபத்தில் காவல் நிலையத்தில் இருந்த பொருட்கள், நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
காவல் நிலையத்திற்கு பின்புறம் தடயவியல் ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி வெடி துகள்களால் இந்த விபத்து ஏற்பட்டிக்கக்கூடும் என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Massive #explosion in a car, parked in the premises of #GangadharaNellore police station in #Chittoor dist, doors shattered, breakage of windows glass.
— Surya Reddy (@jsuryareddy) October 8, 2022
In year 2018 #GDNellore police was seized the car with 2 kg of #opium (#drugs).#AndhraPradesh #Explosive #CarBomb #blast pic.twitter.com/9jBFe8VAlB