விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்
Ganesh Chaturthi
By Thahir
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
உற்சாக கொண்டாட்டம்
விநாயகர் பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர்சதுர்த்தியையொட்டி விநாயர் கோவில்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதையடுத்து கோவில்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் உள்பட பல்வேறு பிரபல விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.