விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது இதற்கெல்லாம் அனுமதி கிடையாது - மாசு கட்டுப்பாட்டு வாரியம்

Ganesh Chaturthi Tamil nadu
By Nandhini Aug 20, 2022 01:12 PM GMT
Report

விநாயகர் சதூர்த்தி திருவிழா

வரும் 31ம் தேதி விநாயகர் சதூர்த்தி திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், கடைகளில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி சிலைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஒரு அடி முதல் 10 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பலவிதமான வண்ணங்களில், பல வடிவங்களில் செய்யப்பட்டுள்ள வித, விதமான விநாயகர் சிலைகள் காண்பவரை கவர்ந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் தற்காலிகமாக வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை ஆற்றிலோ, கடலிலோ சென்று கரைப்பது வழக்கம்.

ganesh-chaturthi

இந்நிலையில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -

சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க அனுமதிப்பட்டுள்ளது.

பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல்(பாலிஸ்டிரின்) கலவையில் செய்யப்பட்ட சிலைகள் கரைக்க அனுமதி கிடையாது.

விநாயகர் சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்தக்கூடாது .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.