தடையை மீறி விநாயகர் சிலை வழிபாடு- போலீசாருடன் தள்ளுமுள்ளு
வேலூரில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் தடையை மீறி விநாயகர் சிலை வைத்து வழிபட முயன்ற இந்து முன்னணியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்து முன்னணியின் சார்பில் கோட்டதலைவர் மகேஷ் தலைமையில் இந்து முன்னணியினர் தடையை மீறி ஆஞ்சநேயர் கோவிலின் வெளியில் சாலையோரம் விநாயகர் சிலைகளை வைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதியில்லை என கூறி போலீசார் விநாகயர் சிலைகளை வாகனங்களில் ஏற்ற முற்பட்டனர் இதனால் ஆத்திரம் அடைந்த இந்து முன்னணியினருக்கும் காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்பட்டது .
இதன் பின்னர் விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் இந்து முன்னணியினரை கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது