மகாத்மா காந்தியின் பேத்திக்கு 7 ஆண்டு சிறை தண்டனை! காரணம் என்ன?

South Africa gandhigranddaughter Ashish Lata Ramgobin jailed 7 years
By Irumporai Jun 08, 2021 08:55 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

மகாத்மா காந்தியின் பேத்தி,ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கியுள்ளது.

  தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகளுமான ஆஷிஷ் லதா ராம்கோபின்( வயது 56) அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் நிர்வாக இயக்குநராக இருந்துள்ளார்.

அப்போது  இந்தியாவில் உள்ள சரக்குகளை, சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்து தருவதாக,மகாராஜ் என்ற தொழிலதிபரிடம் இருந்து இந்திய மதிப்பில் சுமார் 3 கோடியே 33 லட்சம் ரூபாயை ஆஷிஷ் லதா பெற்றுள்ளார்.

ஆனால்,அவ்வாறு ஆஷிஷ் லதா செய்யாததால்,தொழிலதிபர் மகாராஜ், ஆஷிஷ் லதா மீது பண மோசடி புகார் அளித்தார்.

2015 இல் தொடரப்பட்ட இந்த வழக்கில்,ஆஷிஷ் லதாவுக்கு  ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில்,தற்போது அந்த வழக்குக்கான தீர்ப்பு வெளியாகி உள்ளது.

அதில்,ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு தென்னாப்பிரிக்க டர்பன் சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அவர் மேல்முறையீடு செய்ய முடியாத படி அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.